ஸ்டார் அந்தஸ்து சாதாரணமாகக் கிடைக்கவில்லை.. கீர்த்தி சுரேஷ் சொல்கிறார்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அத்துடன் அனுஷ்கா, தமன்னா போல் ஸ்டார் அந்தஸ்தும் பெற்றிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது :ஒரு நடிகையாக, ஸ்டார் அந்தஸ்து என்பது எனக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியம்மா வேடம் ஏற்று நடித்தது எனக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இப்படம் தெலுங்கில் மகாநதி பெயரில் உருவானது. வாழ் நாளில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை . இதுபோல் நிறையப் பெருமைகளை எனது பெற்றோருக்கு நான் பெற்றுத்தர வேண்டும் என்று எண்ணுகிறேன். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

கீர்த்தியைப் பொறுத்தவரை அவரது தந்தை ஒரு தயாரிப்பாளர். தாயார் மேனகா பிரபல நடிகை ஆவார்.

More News >>