சினிமா தியேட்டர்களில் இனி பாதி கொள்ளளவு மட்டும் அனுமதி.. தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி..

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரிய பட்ஜெட் படங்கள் சிறு பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் தியேட்டர்களும் மூடப்பட்டிருக்கின்றன. 14ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏப்ரல் 30வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தியேட்டர்காரர்கள் ஷாக்கில் உள்ளனர். 30ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக சினிமா தியேட்டர்களில் பாதி அளவுத்தான் கொள்ளளவு அனுமதிக்கப்படுமாம். அதாவது 500 பேர் கொள்ளளவு என்றால் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சோசியல் டிஸ்டன்சிங் முறையில் ஒரு சீட் இடை வெளி விட்டுத்தான் ரசிகர்கள் அமரவேண்டும். அப்படியென்றால் தியேட்டருக்கு வருமானம் பாதிக்கும் பாதி குறைந்துவிடும். இதற்கான உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை நடந்து வருகிறதாம்.

More News >>