மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்த கேரள முதல்வரை சந்தித்தார் கமல்
சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, பொதுவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் கேரள முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், அங்கிருந்து சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று அவர் ஓய்வு எடுத்து எடுத்தார். அப்போது, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேரள முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது இல்லை என்று இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.