மகனுடன் வாத்தி கம்மிங் பாடலுக்குப் பிரகதி குத்தாட்டம்..

கே பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க. பெரிய மருது, ஜெயம் போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பிரகதி. இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மட்டுமல்ல படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். கொரோனா தனிமைப்படுத்தலில் குடும்பத்துடன் வீட்டில் இருக்கும் இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு மகனுடன் சேர்ந்து வேட்டிக் கட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டு மிரள வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இதனைப் பிரகதி வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்து பலரும் ஆடிப்போய் உள்ளனர்.

More News >>