வீட்டில் கிலோ மீட்டர் கணக்கில் ஓடும் சிம்பு.. நடிகர் மஹத் வெளியிட்ட வீடியோ..

நடிகர் சிம்பு குண்டாகி விட்டார், படங்களில் நடிக்க மறுக்கிறார் என்ற பேச்செல்லாம் அடங்கி உடலைக் கட்டுக் கோப்பாக்கியதுடன் மாநாடு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்படம் சிம்புவின் தற்போதைய இமேஜை மாற்றி ஆக்ஷன் அரசியல் அதிரடி நாயகனாக உயர்த்தப்போகிறது என்று படத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதனால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் சிம்பு, ஜிம்மிற்கு செல்லாமல் காலை உடற்பயிற்சியை விட்டிலிலேயே மேற்கொள்கிறார். தினமும் காலையில் எழுந்து தனது வாட்சில் நேரம் செட் செய்துகொண்டு பல கிலோமீட்டர் தூரம் வியர்வை சொட்ட முச்சிறைக்க ஓடி தனது உடற்கட்டை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவரது ஓட்டப்பயிற்சி வீடியாவை சிம்புவின் நண்பர் நடிகர் மஹத் வெளியிட்டுள்ளார். அது நெட்டில் வைரலாகி இருக்கிறது.

More News >>