ரஜினியின் 2.0 டீசர் லீக்.. படக்குழுவினர் அதிர்ச்சி
சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் டீசர் இணையத்தளங்களில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
2.0 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே தற்போது இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த டீசரில் 1.27 நிமிட காட்சிகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதேபோல், பா.ரஞ்ஜித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து, வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் காலா படத்தின் டீசரும் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.