ஜோதிகாவோடு நடிக்கும் 5 பிரபல இயக்குனர்கள்.. சூர்யா தயாரிக்கும் பொன்மகள் வந்தாள்

பெண்களை முன்னிலைப் படுத்தி உருவாகும் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் படங்களைத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்போது பொன்மகள் வந்தாள். என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார் இதில் ஜோதிகா பிரதானமாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். புதுமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்குகிறார் .இதில் சிறப்பம்சமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் படங்களை இயக்கும் கே. பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டிய ராஜன், பிரதாப் போத்தன் என ஐந்து பிரபல இயக்குனர்கள் வக்கீல் வேடம் ஏற்று நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த 96 படத்துக்கு இசை அமைத்த கோவிந்த வசந்தா இசை அமைத்துள்ளார். ராம் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஜோதிகா மற்றும் ஐந்து இயக்குனர்கள் தோற்றங்களுடன் உள்ள கவனத்தை ஈர்க்கும் போஸ்டரை படத்தரப்பு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட்டது. இப்படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

More News >>