தோனியும் கோலியும் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்- கங்குலி பெருமிதம்!
"இந்தியக் கிரிக்கெட் அணிக்கு தோனி மற்றும் கோலி கிடைத்தது வரம்" என பெருமிதம் பகிர்ந்துளார் முன்னாள் கேப்டன் கங்குலி.
இந்தியக் கிரிக்கெட் அணியின் 'தாதா' என்றழைக்கப்படும் கங்குலி, தனது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டதிலிருந்து அவரது கருத்துகள் ஒவ்வொன்றாக நாள்தோறும் வெளியாகி வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் தோனி மற்றும் கோலி குறித்த தனது புரிதலை கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.
கங்குலி, "இந்தத் தலைமுறை வீரர்களை எளிதில் ஒரு தீர்மானத்துக்குள் அடக்குவது சரியல்ல. ஒவ்வொருவருக்கும் கால அவகாசம் தேவை. இன்றைய அணியில் தோனி, கோலி போன்ற சிறந்த வீரர்கள் 10 ஆண்டு கால உழைப்புக்குப் பின்னர் இந்த இடத்தை அடைந்துள்ளனர். ஆனால் ரோகித் சர்மா, ராஹானே போன்ற வீரர்கள் சுமார் ஐந்தாண்டுகளாகத்தான் விளையாடி வருகின்றனர். இவர்களுக்கும் தங்களை நிரூபிக்க கால அவகாசம் தேவை. கிரிக்கெட்டின் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சாம்பியன் ஒருவாகி வருகிறார். அந்த வகையில் கோலியின் தற்போதைய சாம்பியன்" எனப் புகழ்ந்துள்ளார்.