கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த ராகுல் வலியுறுத்தல்..

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.தற்போது நாடு முழுவதும் 12,380 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 414 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடியோ கான்பரன்சில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை நாம் அதிகப்படுத்த வேண்டும். கடந்த 72 நாட்களில் நாடு முழுவதும் நடந்த கொரோனா பரிசோதனைகளை கணக்கிட்டால், 10 லட்சம் பேருக்கு 199 பேர் என்ற அளவில்தான் சோதனை செய்திருக்கிறோம். மாவட்டத்திற்கு 350 பேருக்குத்தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.எனவே, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். வேகமாக சோதனைகளை மேற்கொள்வதுடன், எல்லா பகுதிகளிலும் சோதனைகளை நடத்த வேண்டும். பிரதமர் மோடியுடன் ஏராளமான விஷயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன். ஆனாலும் இப்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் போரில் நாம் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்

More News >>