டைட்டானிக் ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு.. ஆனால் ஒரு கண்டிஷன்..

ஹாலிவுட் படம் டைட்டானிக் படத்தில் ஹீரோவாக நடித்தவர் லியார்னோ டிகாப்ரியோ. பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் பொதுச் சேவையிலும் அக்கறை கொண்டவர். சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது அதற்காக ஆதங்கப்பட்டு மெசேஜ் வெளியிட்டவர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அதற்காகத் தனது சார்பில் பல கோடி நிதி அளித்தார். மேலும் நிதி திரட்டி அளிக்க முடிவு செய்தவர் அதற்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது :கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி நிதி திரட்டுகிறேன். அதற்கு யார் நன்கொடை தருகிறார்களோ அவர்கள் என்னுடன் நடிக்க வாய்ப்பு தரப்படும். தற்போது கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் என்ற படத்தில் நானும், ராபர்ட் டி நிரோவும் இணைந்து நடிக்கிறோம். இப்படத்தை மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்குகிறார். கொரோனா நிவாரணத்துக்கு நிதி அளிப்பவர்களுக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்படும். மேலும் அன்றைய தினம் முழுவதும் எங்களோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கவும் வாய்ப்பு தரப்படும் . இவ்வாறு டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

More News >>