100 மில்லியன் வியூவ்களை தாண்டி பாகுபலி-2 பாடல் புதிய சாதனை
சென்னை: பாகுபலி-2 படத்தில் இடம்பெற்றுள்ள சாஹோரே பாகுபலி பாடலை யூடியூபில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனால், இந்தப் பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து பாகுபலி-2 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில், பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களிலும் பாடல்களும் செம ஹிட்டானது.
இந்நிலையில், பாகுபலி 2 படத்தில் இடம் பெற்றுள்ள தெலுங்கு பதிப்பில் வெளியான சாஹோரே பாகுபலி பாடலை, யூடியூபில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனால், இந்தப் பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.
இதன்மூலம், தென் இந்தியாவில் வெளியான பாடல்களில் 100 மில்லியன் வீயூவ்களை கடந்து சென்ற முதல் பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.