இந்தியாவில் கொரோனா பலி 437 ஆக அதிகரிப்பு.. 13,387 பேருக்கு நோய்ப் பாதிப்பு

இந்தியாவில் இது வரை 13,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் 437 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையவில்லை. நேற்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக இருந்தது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 414 ஆக இருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 13,387 ஆக அதிகரித்துள்ளது. இதில் 11,201 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1749 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை கொரோனாவுக்கு 437 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 3205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியில் 1640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1267 பேருக்கு கொரோனா உறுதியானது. 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போல், ராஜஸ்தானில் 1131 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 1120 பேருக்கும், குஜராத்தில் 930 பேருக்கும், ஆந்திராவில் 534 பேருக்கும், கர்நாடகாவில் 395 பேருக்கும், கேரளாவில் 315 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கேரளாவில் 245 பேர் வரை குணமடைந்துள்ளார்கள். அங்குப் பலி எண்ணிக்கையும் 3 ஆகவே உள்ளது.

More News >>