சீனாவில் இருந்து 2.5 லட்சம் கொரேனா பரிசோதனை கருவிகள் இறக்குமதி..

சீனாவிலிருந்து இரண்டரை லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் இந்தியாவின் தலைநகர் டெல்லிக்குச் சரக்கு விமானத்தில் வந்து சேர்ந்துள்ளன.கொரோனா உள்ளதா என 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் ஏற்கனவே வரிசை கொடுத்திருந்தது. ஆனால், இந்தியாவுக்கு வர வேண்டிய முதல் கன்டெய்னரை அமெரிக்கா தட்டிப் பறித்து விட்டது. இதனால், தமிழகத்திற்குக் கடந்த 10ம் தேதி வர வேண்டிய ஒரு லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ் வராமல் போனது.

இதற்கிடையே மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, மாநில அரசுகள் நேரடியாக என்95 முகக் கவசம் கூட வாங்க முடியாது. மத்திய அரசுதான் மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குத் தரும் எனக் கூறப்பட்டது.இந்த சூழ்நிலையில், தற்போது சீனாவிலிருந்து ஆறரை லட்சம் பரிசோதனை கருவிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இதில் முதல் கட்டமாக, இரண்டரை லட்சம் பரிசோதனை கருவிகள்(ஐ.ஜி.எம் மற்றும் ஐஜிஜி கருவிகள்) சரக்கு விமானங்கள் மூலமாக டெல்லிக்கு வந்துள்ளன. மொத்தம் 522 பேக்கிங்குகளில் இவை வந்துள்ளன. இது தவிர 13 பேக்கிங்குகளில் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பரிசோதனை கருவிகளும் வந்துள்ளன.

More News >>