5முறை ஆஸ்கர் கதவைத் தட்டியவர் கொரோனாவுக்கு பலி.. ஜூராசிக் பார்க் இயக்குனர் இரங்கல்..

ஐந்து முறை ஆஸ்கருக்கு நியமனம் ஆனவர் ஆலென் டேவி. இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 77. பிரபல ஒளிப்பதிவாளரான ஆலென் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டிவென் ஸ்பீல் பெர்க் போன்ற பிரபல இயக்குனர் படங்களில் பணியாற்றி உள்ளார். E T எனப்படும் எக்ஸ்ட்ரா டெரெஷ்ட்ரியல், எம்பயர் ஆஃப் தி சன் போன்ற பல படங்களுக்கு ஆலென் பணியாற்றியதைக் குறிப்பிடலாம். ஆலென் மறைவுக்கு ஸ்டிவென் ஸ்பெல் பெர்க் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

More News >>