நீண்டநாள் காதலியைக் கரம்பிடித்தார் சூது கவ்வும் ரமேஷ் திலக்!
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் ரமேஷ் திலக் மற்றும் ஆர்.ஜே.நவலெட்சுமி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவான 'நேரம்' திரைப்ப்டத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ரமேஷ் திலக். அதன் பின்னர் சூது கவ்வும், ஆர்ஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களில் தனது அசத்தலான குணசித்திரம் மற்றும் நகைச்சுவை மிக்க நடிப்பால் சிறந்ததொரு குணசித்திர நடிகராகக் கருதப்படுகிறார்.
ரமேஷ் திலக் நீண்ட நாள்களாக ஆர்.ஜே.நவலெட்சுமி என்பவரைக் காதலித்து வந்தார். இருவரது வீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிடவே இவர்களது திருமணம் சென்னையில் பெசண்ட் நகரில் உள்ள ஒரு முருகன் கோயிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.