சியான் விக்ரம் பிறந்த நாளில் ஸ்பெஷல் வீடியோ கோப்ரா டீம் வெளியிட்டது..

சியான் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 மாதத்துக்கு முன் கோப்ரா படத்தில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் கொண்ட 8 ஸ்டில்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியிட ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அதை வெளியிட முடியாத நிலை உள்ளது. இன்று விக்ரம் பிறந்ததினம். இதையொட்டி கோப்ரா டீம் ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் வாழ்த்துக் கூறி உள்ளனர். ரசிகர்களும் தங்கள் பங்குக்கு ஹேஷ்டேக் உருவாக்கி விக்ரமுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

More News >>