சென்னை 28 டீம் தயாரித்த கொரொனா கோ கோ.. சவுண்ட் அண்டு லைட் எஃபெக்ட் கொடுத்துக் கலகல..

சென்னை 28 டீம் கூட்டணி என்றாலே கலாட்டா காமெடி தான். இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. கொரொனா விழிப்புணர்வு பற்றிய வீடியோ தயாரிக்க இயக்குனர் வெங்கட் பிரபு தலைமையில் இணைந்த இக்குழு சென்னை 28 பாணியிலேயே காட்சியைத் தொடங்குகின்றனர். படத்தில் அந்த சிறுவனுடன் கிரிக்கெட் மேட்ச் ஆடும் காட்சியை மொட்டை மாடியில் ரீஷூட் செய்துள்ளனர். இதையடுத்து நடிகர்கள் சிவா, பிரேம்ஜி, விஜய்வசந்த், அரவிந்த், நடிகை விஜயலட்சுமி என ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் நடித்துக் கலகலக்க வைப்பதுடன் கொரொனாவில் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நடித்தும் காட்டி உள்ளனர்.

மேலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களுக்கு போலீஸார் தரும் நூதன தண்டனை, பிரதமர் மோடி சொன்னபடி கைதட்டியும், விளக்கு ஏற்றியும் சவுண்டு அண்டு லைட் எஃபெக்ட் கொடுத்த காட்சிகளையும் காமெடியாக பகிர்ந்து குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கின்றனர். கடைசியில் கொரொனா கோ கோ என்று கோஷம் போட்டு கொரொனாவை விரட்டுகின்றனர். இந்த வீடியோவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

More News >>