டிக்டாக் பெண்ணை நடிக்க அழைத்த சர்ச்சை இயக்குனர்..

பிரபல நடிகர் முதல் எல்லோரைப் பற்றியும் விமர்சித்து அடிக்கடி சர்ச்கசைகளில் சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்துபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவரையே ஒரு பெண் கலாய்த்து, வர்மா பேசுவது போலவே பேசி டிக்டாக் வீடியோ வெளியிட்டதுடன் அவருக்கே அனுப்பியும் வைத்தார். அதைக்கண்டு கோபப்டாமல், உனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் பயோடேட்டாவை அனுப்பிவை என்று அவருக்கு மெசேஜ் போட்டார் வர்மா, ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த பதிவை உடனடியாக அவரே நீக்கிவிட்டார்.

More News >>