அமலா இல்லம்- கண்தானத்துக்காக நடிகை அமலாபால் புது முயற்சி!

நடிகை அமலாபால் கண் தானம் குறித்த விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

நடிகை அமலாபால் தனது புதியதொரு முயற்சியாக 'அமலா இல்ல' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். முற்றிலும் கண் தானத்துக்காக இத்தொண்டு நிறுவனம் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். இன்றிலிருந்து செயல்படத் தொடங்கும் இந்நிறுவனம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு, கண் தானம் தேவைப்படுவோர், அதற்கான நிதி உதவி சேகரிப்பு என பல தளங்களில் இயங்கவுள்ளது.

இதுகுறித்து அமலாபால் கூறுகையில், "தனியார் கண் மருத்துவமனை விழா ஒன்றுக்காக சிறப்பு அழைப்பாளராக சில மாதங்களுக்கு முன் அழைக்கப்பட்டிருந்தேன். அப்போதுதான் கண் தானம் குறித்த புரிதலைப் பெற்றேன். அதன் பின்னர் நம் நாட்டில் மட்டும் கண் தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி இன்றியும், தானம் பெற கண்கள் இல்லாமல் பலர் பார்வையின்றி இருப்பது குறித்து ஆராய்ந்து தெரிந்துகொண்டேன். இதன் பின்னரே கண் தானம் தொடர்பான விழிப்புணர்வையும், தேவையையும் எடுத்துக்கூற வேண்டும் என விரும்பி இந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்" எனக் கூறினார்.

More News >>