திரௌபதி பட டைரக்டரை கலாய்த்த தளபதி ரசிகர்..

இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா? தல அஜீத் மச்சான் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி., இப்படம் சர்ச்சையானது. படத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சர்ச்சையாகவே பதில் அளித்து வந்தார் மோகன். இந்நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவரை போலீஸ் தாக்க அந்த போலீஸ் காரரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று மோகன் டிவிட்டரில் மெசெஜ் பகிர்ந்தார். அதைக்கண்ட விஜய் ரசிகர், சார், உங்கள் மெசேஜ் உடன் திரௌபதி படத்தை டேக் செய்ய மறந்திட்டீங்க என்று கமென்ட் பகிர்ந்திருந்தார். அதைக்கண்டு கோபம் அடைந்தாலும் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, நான் எதுவும் சொல்லல, சொன்னா தளபதி பின்னாடி ஒளிந்து கொள்வீர்கள்.. போங்க தம்பி வேலைய பாருங்க எனப் பதில் அளித்திருக்கிறார்.

More News >>