இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்தது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆனது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 25 நாட்களில் இந்நோய் பல மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 991 பேருக்கு நோய் பரவியதுடன், 43 பேர் பலியாகினர்.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 14,378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 1992 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 11,906 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 480 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,323 பேருக்கும், டெல்லியில் 1707 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 283 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் வரை பலியாகியுள்ளனர்.

More News >>