நடிகர் திருமணம், நடிகை கேள்வி? பலர் பட்டினி, உங்களுக்கு விருந்தா..

கன்னட நடிகர் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் பிரமுகரின் உறவினர் மகள் ரேவதிக்கும் ஊரடங்கு நாளில் கர்நாடகாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. இது ஊரடங்கு உத்தரவை மீறிய செயல் என்று கர்நாடக போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரவீணா டாண்டன் நடிகர் நிகிலுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அதில், நாட்டில் நிலவும் சூழல் பாமரருக்குத் தெரியாது, பலர் வெளியூர்களில் சிக்கி இருக்கின்றனர், இன்னும் பலர் பட்டினியாக இருக்கின்றனர். பலர் உதவி செய்தும் வருகின்றனர். இந்த சூழலில் நீங்கள் திருமணம் செய்துள்ளீர்கள். அங்கு என்ன விருந்து பரிமாறப்பட்டது. பலர் பட்டினி கிடக்கையில் உங்களுக்கு விருந்தா? ஆச்சரியம்தான் ! சமூக விலகல், ஊரடங்கு விதிகள், இதெல்லாம் வேடிக்கையா? இதுதான் பெரியமனிஷத் தனமா?

இவ்வாறு ரவீணா கேட்டிருக்கிறார்.ரவீணா டாண்டன் தமிழில் கமலுடன் ஆளவந்தான் மற்றும் அர்ஜுனுடன் சாது போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்தி படங்களில் நடிக்கிறார். நிகிலை பொறுத்தவரைக் கன்னட படங்களில் நடிக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>