சினிமா தொழிலாளர்களுக்குப் பிரபல நடிகர் கூப்பன்.. 12 ஆயிரம் பேருக்கு வழங்கினார்..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த செ ரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் கொரோன ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தின சம்பளக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர்களுக்கு தலா 1500 ரூபாய் மதிப்புள்ள பிக்பஜார் கூப்பன் வழங்கி உள்ளார். அமிதாப்பச்சன். இந்த உதவிக்குத் தெலுங்கு திரையுலகினர் சார்பில் நடிகர் சிரஞ்சீவியும் நன்றி தெரிவித்துள்ளார்.

More News >>