சந்தீப் கிஷன் நடிக்க வந்து 10 வருடம் நிறைவு.. தமிழில் மேலும் 2படங்கள்..

மறந்தேன் மன்னித்தேன், மாநகரம், நெஞ்சில் துணிவு இருந்தால், மாயவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன். இவர் தெலுங்கு படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார்.சந்தீப் கிஷன் திரையுலகுக்கு வந்து 10 வருடங்கள் நிறைவு பெற்றது. இதையொட்டி அவருக்குத் தமிழ், தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்கள். சந்தீப் கிஷன் தமிழில் நரகாசுரன் மற்றும் கசடதபற ஆகிய படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் சந்தீப்புக்குக் கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இவர் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் சந்தீப் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News >>