மான்ஸ்டர் இயக்குனருக்கு பிடித்த மும்தாஜின் கட்டிப்புடி கட்டிப்புடிடா.. யாருடன் படம் பார்த்தார் தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யா. பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் படத்தை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். இவருக்கு மிகவும் பிடித்த பாடல் குஷி படத்தில் விஜய் . மும்தாஜ் நடித்து இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல்.. படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் தன்னுடைய பேவேரெட் பாடல் வரிசையில் இப்பாடல் இருக்கிறதாம். குஷி படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். குஷி பட கட்டிப்புடி பாடல் பற்றி கொரொனா ஊரடங்கில் தனது ஞாபகத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

குஷி படத்தைப் புதுக்கோட்டையில் பார்த்தேன் ஒரு பக்கம் அம்மா, இன்னொரு பக்கம் தங்கை அமர்ந்திருந்தனர், திரையில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் வந்ததும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நெற்றி வியர்க்க அப்பாடலைப் பார்த்தேன். அந்த அனுபவத்தையும் மறக்க முடியாது. அந்த பாடலையும் மறக்க முடியாது. என்னுடைய பேவேரெட் பாடல்கள் பட்டியலில் இப்போதும் அப்பாடல் இருக்கிறது. இப்படத்தை இயக்கியது எஸ்.ஜே.சூர்யா இவரை வைத்து படம் செய்ய வேண்டும் என்று அப்போதே எனக்குத் தோன்றியது என்றார் நெல்சன் வெங்கடேசன்.

More News >>