கேஜிஎப் ஹீரோ யஷ் நடிக்கும் 2ம் பாகம் என்னவானது? டீஸருக்கு இல்லை, டிரெய்லர்தானாம்..

கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவான படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதில் யஷ் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ நிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் ஆகி வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் யஷ். ஸ்ரீநிதி ஆகியோருடன் சஞ்சய்தத், ரவீணா டாண்டன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படம் வரும் அக்டோபரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரொனா லாக்டவுனால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் ரிலீஸ் தேதி பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் 2ம் பாகம் படத்தின் டீஸராவது வெளியிடுங்கள் என்று யஷ் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதற்குப் படத்தரப்பு பதில் அளித்திருக்கிறது,யஷ் படத்தின் டீஸர் இல்லை அதற்குப் பதிலாக இப்படத்தின் டிரெய்லர் பட ரிலீசின் நெருக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

More News >>