மீனா வெளியிட்ட தெறி விஜய் படம்.. எதற்காகத் தெரியுமா?

தளபதி விஜய், சமந்தா நடித்த தெறி படத்தில் அவர்களது மகளாக நடித்தார் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகள். இப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். படம் திரைக்கு வந்ததும் நைனிகா பிரபலமானார். தெறி நைனிகா என்று அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நைனிகா நடித்தார். கொரோனா ஊரடங்கில் நட்சத்திரங்கள் தங்களின் ஆல்பங்களை தேடிப்பிடித்து பிடித்தமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை மீனா தனது மகள் நைனிகா தெறி பட வெற்றி விழாவில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தி உள்ளார்.

தற்போது மோகன்லாலுடன் திரிஷ்யம் மலையாள படத்தில் நடித்த மீனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.

More News >>