போத்தீஸ் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
சென்னை, தி.நகரில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடை போத்தீஸ். சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் போத்தீஸ் கிளைகளை கொண்டுள்ளது. இந்தக் கடையின் குடோன் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த குடோனில் விற்பனையாகாத பழைய துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்றிரவு திடீரென குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில், குடோனிற்குள் இருந்த பொருட்கள் எரிந்து நாசாமானது. சம்பவம் குறித்து, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீரர்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றாலும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.