நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? முதன்முறையாகப் படங்கள் வெளியிட்டார்..

பூவே பூச்சசூடவா படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நதியா. ரஜினியுடன் ராஜாதி ராஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர்.1988- ம் ஆண்டு சிரிஷ் என்பவரை மணந்தார். பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்கா சென்று செட்டிலானார். நதியாவுக்கு சனம், ஜனா என 2 மகள்கள் உள்ளனர். நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற கதை கேட்டுப் பிடித்துவிட அதில் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எல்லா நடிகைகள் இணைந்தபோதும் நதியா ஒதுங்கியே இருந்தார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். குடும்பத்தினருடன் தற்போது ஜப்பான் சென்றார். அங்கு மகள்களுடன் இருக்கும் படத்தை முதன் முறையாக வெளியிட்டிருக்கிறார். இன்றும் இளமை தோற்றத்தைத் தக்க வைத்திருக்கும் நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More News >>