ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை பயணம்!
ரோகித் சர்மா தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி நிதாஸ் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை பயணமாகியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கைக்குப் பயணமாகியுள்ளது. இலங்கையில் இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து முத்தரப்பு டி20 போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளன. இலங்கயின் 70-வது சுதந்திர தின ஆண்டு விழாவை முன்னிட்டு கொலம்புவின் பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கும் இந்தத் தொடர் வருகிற மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது. இலங்கைத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொடரிலிருந்து நட்சத்திர வீரர்களான தோனி மற்றும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொடரில் இளம் வீரர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக ஹோடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளனர்.