ஆர்யாவை வெயிட் போட வைக்கும் ஷாயிஷா.. தட்டு தட்டாக கப் கேக் கொடுத்துத் திணறடிக்கிறார்..

நடிகர் ஆர்யா, நடிகை ஷாயிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் ஷாயிஷா தொடர்ந்து நடிக்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து டெடி என்ற படத்தில் நடிக்கின்றனர். புதிய படத்துக்காக ஆர்யா கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஜிம்பாய்போல் கட்டுமஸ்தாக்கி இருக்கிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வரவே இருவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர் ஒரு பக்கம் பத்து கிமீ ஓடி பயிற்சி செய்து விட்டுக் கட்டுக்கோப்புடன் வீட்டுக்கு வருகிறார் ஆர்யா. இதற்கிடையில் பிரியாணி, சிக்கன் வறுவல் என்றும் மறுபுறம் மாம்பழ கேக், கப் கேக் என்றும் வெரைட்டியாக சமைத்து ஆர்யாவிடம் நீட்டுகிறார் ஷாயிஷா. வேறு வழியில்லாமல் அவரும் வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளுத்துக் கட்டிவிட்டு சூப்பரா இருக்கு என்றபடி கன்னத்தில் கிஸ் கொடுத்து அடுத்த தட்டு ரெடியா என்று கேட்கிறார். இதனால் ஆர்யாவின் கட்டுக்கோப்பான தோற்றத்தில் மேலும் வெயிட் போட தொடங்கி விட்டதாம்.

More News >>