அமெரிக்காவில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது பிரம்மாண்ட ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும், சிறந்த படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 90வது ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது.இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இதில், தி ஷேப் ஆட் வாட்டர் திரைப்படத்திற்கு 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கிரிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி என்ற திரைப்பம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங்’ படத்திற்காக சாம் ராக்வெல்லுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது டார்க்கஸ்ட் ஹவர் என்ற படத்திற்காக கஸி ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது ஃபாண்டம் த்ரட் என்ற படத்திற்காக மார்க் பிரிட்ஜஸிற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் 2வது முறையாக தொகுத்து வழங்கினார்.