அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் நடிகை.. காப்பாற்றச் சொல்லி வீடியோ வெளியிட்டார்..

நம்மூர் நடிகர் பிருதிவிராஜ் கத்தார் நாட்டில் படப்பிடிப்பு நடத்தச் சென்று கொரோனா தடையால் படக்குழுவுடன் சிக்கித் தவிக்கிறார். அதே போல் அமெரிக்காவில் படப்பிடிப்புக்குச் சென்று சிக்கிக் கொண்ட நடிகை தன்னை காப்பாற்றும்படி கதறி இருக்கிறார். ஆனால் இவர் பாகிஸ்தான் நடிகைமீரா. ' லாங் டிஸ்டன்ஸ்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றார் மீரா. நியார்கில் படப் பிடிப்பு நடந்துவந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதையடுத்து படக்குழுவினர் பலர் அங்கிருந்த பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். நடிகை மீரா அங்கேயே சிக்கிக்கொண்டார்.

தற்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வீடியோவில் ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதில், ' என்னுடன் வந்த கேமிராமேன் இறந்து விட்டார். நான் மட்டும் தனியாக இங்குச் சிக்கிக் கொண்டிருக்கிறேன் நியூயார்க் முழுவதும் சுடுகாடு போல் உள்ளது. என்னிடம் பணம் ஏதுவும் இல்லாமல் தவித்து வருகிறேன். உடனடியாக காப்பாற்றுங்கள். அந்நிய மண்ணில் நான் சாக விரும்பவில்லை' என உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

More News >>