சென்னையில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் பாதிப்பு 1596 ஆனது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதித்தவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனாவால் இது வரை 18 பேர் பலியாகியிருக்கின்றனர். 635 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக 358 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 134, திருப்பூரில் 109, திண்டுக்கல் 76, ஈரோடு 70, திருநெல்வேலி 62, செங்கல்பட்டு 56, நாமக்கல் 51, திருச்சி 50 என்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானோருக்கு கொரோனா பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது 23 லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 6060 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை மொத்தம் 53,045 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு லட்சத்து 8357 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

More News >>