2.0 மேக்கிங் வீடியோ ரிலீஸ்.. இயக்குனர் சங்கர் வெளியிட்டார் (வீடியோ)
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் சங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் படம் 2.0. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2.0ன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தப் படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.தொடர்ந்து, நேற்று 2.0 படத்தின் டீசர் திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் ரிலீசாக படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் குறித்த மேக்கிங் வீடியோவை இயக்குனர் ஷங்கர் இன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் 2.0 படம் உருவாகிய விதம் குறித்து நடிகர் அக்ஷய் குமார், இயக்குனர் சங்கர், வி.எப்.எக்ஸ் சூப்பர் வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், வி.எப்.எக்ஸ் தலைவர் ரிப் தாகர், வி.எப்.எக்ஸ் சூப்பர்வைசர் வால்ட் ஜோன்ஸ் (டால் பில்ம்ஸ்) ஆகியோர் பேசி உள்ளனர்.
2.0 டீசர் லீக் ஆனதை தொடர்ந்து, மேக்கிங் வீடியோவை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் சங்கர் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.