விஜயகாந்த்துக்கு ஹேர் கட் செய்த பிரேமலதா.. தந்தைக்கு ஷேவ் செய்த காமெடியன்

கொரோனா ஊரடங்கில் சலூன்கள் மூடப்பட்டிருப்பதால் வீட்டில் உள்ளவர்களே பார்பராகி இருக்கின்றனர். சமீபத்தில் நடிகரும், தே மு தி க தலைவருமான விஜய காந்த்துக்கு அவரது மனைவி பிரேமலதாவே ஹேர் கட் செய்து, தலைக்கு டை அடித்தும் கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டி பியூட்டிஷியன் போல் சீர்படுத்தினார். அந்த வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பிறகு விஜயகாந்தே தலை சீவி சிரித்தபடி போஸ் கொடுத்தது அவரது தொண்டர்களையும், ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அந்த பாணியில் நடிகர் சதீஷ் ஒரு விடியோ வெளியிட்டார்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் சதீஷ். இவர் அடிக்கடி தனது இணைய தள பக்கத்தில் காமெடியான வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் சதீஷ் திடீரென பார்பராக மாறினார் ஊரெல்லாம் சலூன் கடைகள் அடைத்திருக்கும் நிலையில் தனது தந்தையை உட்கார வைத்து ஷேவிங் செய்யும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

More News >>