மூன்று விருதுகளைத் தட்டிச்சென்ற டர்ன்கிரிக்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மூன்று பிரிவுகளின் கீழ் ‘டர்ன்கிரிக்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ’ரிமம்பர் மீ ஃப்ரம் கோகோ’ என்ற படம் தேர்வாகியுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளராக ரோஜர் ஏ டீகின்ஸ் ’ப்ளேட் ரன்னர் 2049’ படத்துக்காக வென்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்காக ’கெட் அவுட்’ திரைப்படத்துக்காக ஜோர்டன் பீலே வென்றுள்ளார்.

பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கோப் ப்ரெயண்ட் ’டியர் பேஸ்கெட்பால்’ திரைப்படத்துக்காக ஆஸ்கர் வென்றுள்ளது ஆஸ்கர் அரங்கத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ரன்செஸ் மெக்டோர்மண்ட் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இவரது ஆஸ்கர் மேடைப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. ’டார்க்கெஸ்ட் ஹவர்’ திரைப்படத்துக்காக கேரி ஓல்டுமேன் 2018-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

 

 

More News >>