நடிகர் விஜய் ரூ 1.30 கோடி கொரோனா நிவாரண நிதி..

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு உள்ளிட்ட பெரும்பாலான தொழில்கள் முடங்கிவிட்டன. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, லாரன்ஸ், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்தனர்.

நடிகர் விஜய் இன்று ரூ 1.30 கோடி நிதி அளித்தார். அதனைப் பிரதமர், முதல்வர் மற்றும் பெப்சி உள்ளிட்ட நிதியாகப் பிரித்து அறிவித்திருக்கிறார். அதன்படி பிரதமர் நிவாரண நிதியாக ரூ 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ 50 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். மேலும் கேரள முதல்வர் நிவாரண நிதி ரூ.10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர் நிவாரண நிதியாக தலா ரூ.5 லட்சம் அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

More News >>