டாப்ஸிக்கு 4 பயிற்சியாளர்கள் எதற்குத் தெரியுமா?

ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த டாப்ஸி இந்தியில் நடிக்கச் சென்றார். தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வரும் அவர் அங்கு தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தப்பட்ட கதைகளை அதிகம் தேர்வு செய்கிறார். ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் தற்போது ஓட்டப் பந்தய வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் நான்கு பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறார். ஓட்டப் பயிற்சி, தசை இறுக்கம், உடல் வலிமை, சத்தான உணவு என நான்கு பயிற்சிகளும் கொரோனா ஊரடங்கில் தவறாமல் செய்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனைத்திலும் தன்னை தகுதியாக்கிக்கொள்ளவே இந்த தீவிர பயிற்சி செய்து வருகிறாராம்.

More News >>