இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,393 ஆக உயர்வு.. பலி 681 ஆனது..

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.23) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 21,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 4257 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 16,454 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் 5652 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 269 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 2417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 103 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 2348 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 48 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 1892 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 80 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவில் 946 பேர் பாதித்த நிலையில், 23 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 1441 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில், 21 பேர் பலியாகி விட்டனர். ஆந்திராவில் 813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1629 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>