யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகத்திற்கு 3வது இடம்
யூடியூப் மூலம் வீடியோ அதிகம் பார்ப்பவர்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் ரீதியான வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டிராய்ட் செல்போன்கள் இருப்பதால், உலகமே நமது கையில் இருப்பது போன்றே தோன்றும். குறிப்பாக இணையத்தளம். என்ன இல்லை இணையதளத்தில் ?? படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் அவ்வளவு இருக்கிறது.
அந்த வகையில், வீடியோக்களை பார்ப்பதற்காகவே இருக்கிறது யூடியூப். எந்த நாட்டில் என்ன நடக்கிறது, கல்வி, அறிவியல், குழந்தைகளுக்கான ரைம்ஸ் பாடல்கள் முதற்கொண்டு அனைத்து வகையான வீடியோக்களும் இதில் கொட்டிக்கிடக்கிறது.
இந்நிலையில், யூடியூப் மூலம் அதிகம் வீடியோ பார்க்கும் பகுதி மக்கள் யார் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தமிழகத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சமையல் குறிப்புகள், கல்வி, அரசியல், சினிமா ஆகிய வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுவதாகவும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், உலகம் முழுவதும் 220 மில்லியன் மக்கள் யூடியூப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் பேஸ்புக் மோகம் குறைந்து ட்விட்டரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.