கொரோனா தடுப்பு மருந்து விரைவில் தயாராகும்.. டிரம்ப் அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவையும் ஆட்டிப் படைத்து வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(ஏப்.23) கூறியதாவது:அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 23 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. நாம் பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளதால், வைரஸ் கோடை காலத்திற்குள் கட்டுக்கு வந்து விடும்.

தற்போது 95 சதவீத மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். மே 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முழுமையாக நீக்கப்படாவிட்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்ய சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதே சமயம், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாம் இறுதி கட்டத்தை எட்டி விட்டோம்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

More News >>