தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1683 ஆக உயர்வு.. பலி 20 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 752 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டது. அமெரிக்காவையே மிரள வைத்துள்ள இந்நோய் இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 718 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று(ஏப்.23) 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. இதில் 752 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். அதே போல், நேற்று 2 பேர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 20 ஆனது.மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 11,478 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 6880 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து, இது வரை 59,952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலையில், அதிகபட்சமாகச் சென்னையில்தான் 400 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கோவை 134, திருப்பூர் 110, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, செங்கல்பட்டு 57, நாமக்கல் 55, மதுரை 52, திருச்சி 51 என மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிருவருக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது.

More News >>