சிவகார்த்திகேயன் உருவாக்கிய ஹேஷ் டேக்.. வி லவ் டாக்டர்ஸ்..

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :கொரானா தோற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான விதிமுறைகளும் எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் சில காலம் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன். எனவே வீட்டில் இருங்கள் பாதுகாப் பாக இருங்கள். பெரியவர் களையும், குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறை, செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவப் பிரதிநிதிகள் ஆகியோருடன் சேர்த்து இன்னும் ஒருவருக்கும் நன்றி சொல்லவே இந்த வீடியோ வெளியிட்டுள்ளேன்.

குடும்பத்தைப் பற்றியும், ஆபத்தைப் பற்றியும் யோசிக்காமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வெளியே வந்து சேவை செய்யும் மனித கடவுள்கள் டாக்டர்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட். அவர்கள் மீது நமக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர்களுக்காக,' வி லவ் டாக்டர்ஸ், ' என்ற ஹேஷ்டேக் உருவாக்கி இருக்கிறேன். அதில் அவர்கள் பணியைப் பற்றி நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். சமீபத்தில் நடந்த சில சம்பவங்களைப் பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. டாக்டர்கள் நமக்காக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு உரியக் கௌரவம் தர வேண்டியது நம்முடைய கடமை அவர்கள் மனித கடவுள்களாக இப்போது இருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த சொல் செயல் 'வி லவ் டாக்டர்ஸ்'. அதைச் செய்து காட்டுவோம்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

More News >>