நியூஸ்பேப்பர் உடை அணிந்த ஹீரோயின்.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி..

எஞ்சல் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பாயல் ராஜ்புத். இப்படத்தை அதியமான் இயக்குகிறார். தெலுங்கில் ஆர்டிஎக்ஸ் 100 படத்தில் நடித்திருந்தார். இதுதவிர இந்தி படங்களிலும் நடிக்கிறார்.பாயல் தனது இணையதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

தற்போது நியூஸ் பேப்பரில் ஆடை தயாரித்து அணிந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பாராட்டியும், விமர்சித்தும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். ஒரு ரசிகர் இந்த ட்ரெஸ்ஸை எங்க ஊர்ல தங்கமான புருஷன் படத்தில் கஞ்சத்தனம் செய்யும் ஹீரோவாக நடித்த எஸ்.வி.சேகர் அப்போதே உடுத்திவிட்டார். நாங்கெல்லாம் அப்பவே அப்படி என்று நக்கலடித்திருக்கிறார்.

More News >>