வெட்டியா இருக்கிறது புரியுது.. நடிகருக்கு இயக்குனர் ரிப்ளை..

கோ, அயன். காப்பான் போன்ற படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். காப்பான் படத்தையடுத்து புதிய ஸ்கிரிப்ட் உருவாக்கி வருகிறார் ஆனந்த். கொரொனா லாக்டவுனால் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கும் அவருக்கு நடிகரும் கலை இயக்குனருமான கிரண் ஒரு பரிசு அனுப்பினார். அதில் கே.வி.ஆனந்த்தின் உருவப் படம் தத்ரூபமாக வரைந்திருந்தார் கிரண். அதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஆனந்த், ”நீ வீட்ல எவ்ளோ வெட்டியா உக்கார்ந்திருக்கேன்னு தெரியுது. என்னையெல்லாம் படமா வரைஞ்சிருக்கியே ஆனாலும் ஓவியம் ரொம்ப நல்லா இருக்கு எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>