மோசமான விளைவு ஏற்படும்.. அரசுக்கு டி.டி.வி. எச்சரிக்கை

அரசு நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கைது செய்வது என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். கோவையில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் சிம்பிளிசிட்டி என்ற ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காகக் கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

More News >>