கொரோனா சோதனை கருவி.. டெல்லி ஐ.ஐ.டி கண்டுபிடிப்பு.. குறைந்த விலைக்கு கிடைக்கும்

கொரோனா தொற்று நோயைக் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவிகளை டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குறைந்த விலைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் 24,506 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1755 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், கொரோனா பரிசோதனைகள், பிசிஆா் முறையில்தான் மேற்கொள்ளப்பட்டன.

இதன்பின், விரைவில் அதிகமானோருக்குப் பரிசோதிப்பதற்காக விரைவுப் பரிசோதனை கருவி(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) மூலம் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆா்) ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, 5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்கத் தமிழக அரசு சீனக் கம்பெனிகளிடம் ஆர்டர் செய்தது. அதில் பல குளறுபடிகளால் 36 ஆயிரம் கருவிகள் மட்டும் கிடைத்தது.

இதற்குப் பின்னர், சீனக் கம்பெனிகளின் ரேபிட் டெஸ்டிங் கருவிகள் சரியாக இல்லை என்று கூறி, அவற்றைப் பரிசோதனை செய்வதை நிறுத்துமாறு இந்திய மருத்துவக் கல்வி ஆராய்ச்சி கழகம்(ஐசிஎம்ஆர்) உத்தரவிட்டது. இதனால், மீண்டும் பிசிஆர் முறையில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் புதிதாக ஒரு பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றி, ஐ.ஐ.டி. பேராசிரியர் வி.பெருமாள் கூறுகையில், டெல்லி ஐ.ஐ.டி.யில் கொரோனா பரிசோதனைக்கான கருவிகளைக் கண்டுபிடிப்பதற்குக் கடந்த ஜனவரி முதல் முயற்சி செய்து வந்தோம். தற்போது, கொரோனா தொற்று உள்ளதா என்று கண்டறியும் பரிசோதனைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். இது குறைந்த விலைக்கு கிடைக்கும். இதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதலும் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்தார்.

More News >>