சூர்யா தயாரிக்கும் படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் தடை? ஜோதிகா படம் நெட்டில் ரிலீஸ் எதிரொலி

ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். கே.பாக்யராஜ், தியாகராஜன், பாண்டிய ராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை 2டி பட நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். ஊரடங்கு நாளில் திரையரங்குகள் மூடப்பட்டியிருக்கும் நிலையில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருக்கின்றன. எப்போது திரையரங்கு திறக்கப்படும். திரைக்கு வரத் தயாராக இருக்கும் படங்கள் எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியாத நிலை உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற இணைய தளங்களில் மக்கள் படம் பார்க்க தொடங்கிவிட்டதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோ வில் கூறும்போது, 'பொன்மகள் வந்தாள் திரைப்படம் ott எனப்படும் இணைய தளம் வழியாக வெளியாகிறது என்ற தகவல் திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தியேட்டரில் படம் வெளியிட்ட பிறகே ott தளத்திற்குப் படங்களைத் தர வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை மீறக் கூடாது. இதுபற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் ott தளத்தில் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். முதலில் படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள் என்று நாங்கள் கூறியபோது அதை ஏற்கவில்லை. எனவே இனி குறிப்பிட்ட பட நிறுவனம், அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களின் படத்தை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறி உள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை சூர்யா தயாரித்திருக்கிறார். அந்நிறுவனத்தில் சூர்யா நடிக்கும் படங்கள் மற்ற யாரும் நடிக்கும் படங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

More News >>