சென்னையில் திடீர் அச்சம் ஏன்? இயக்குனர் எழுப்பும் கேள்வி

கொரோனா தொற்று பரவாமலிருக்க மே 3ம் தேதி வரை லாக்டவுன் உள்ளது. திடீரென்று சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இதனால் மக்களிடையே அச்சம் பரவியது. பொருட்கள் வாங்கக் கடைகளில் குவிந்தனர். ஒவ்வொரு கடையிலும் கிலோ மீட்டர் கணக்கில் கியூ நின்றது. சமூக இடைவெளி காணாமல் போனது. போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில், 'ஏன் சென்னையில் இவ்வளவு பயம்? அடுத்த 3 நாட்கள் கடுமையான லாக் டவுனால் பொருட்களுடன் சேர்த்து கொரோனா வைரஸையும் வாங்கி வந்து விடுவார்கள் போலிருக்கிறது. கடை விதிகளில் இடைவெளியில்லாத கூட்டம். எல்லா நாளும் பிரியாணி சமைக்கப் போறாங்களோ? அமைதியாக இருங்கள் பயப்பட வேண்டாம் இதுவும் கடந்துபோகும் பாதுகாப்பாக இருங்கள் மக்களே ' எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>